மக்களவையில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என்ற சமாஜ்வாதி எம்.பி., ஆர்.கே.சவுத்ரியின் கோரிக்கையை சபாநாயகர் ஓம்.பிர்லா நிராகரித்துள்ளார்.
மக்களவையில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என்றும், அதற்கு பதிலாக இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும் என சமாஜ்வாதி எம்.பி., ஆர்.கே.சவுத்ரி சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
பார்லிமென்ட் என்பது ஜனநாயகத்தின் கோவில்; அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழ்வது செங்கோல். என்றும் அவர் கடிதத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையுல் செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாதி எம்.பி., சவுத்ரி விடுத்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்துள்ளார்.