இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிடி. உஷாவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், மாநிலங்களவை உறுப்பினர், பத்மஸ்ரீ பிடி. உஷாவின் தேசியம் மற்றும் சர்வதேச சாதனைகள் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தங்கள் நம்பமுடியாத சாதனைகள் எதிர்கால தலைமுறைகளையும் ஊக்கப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். தங்கள் நீண்ட ஆயுளுக்காக இறைவனை பிரார்த்திப்பதாக எல்.முருகன் கூறியுள்ளார்.