ரயிலில் படுக்கை விழுந்ததில் பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
கேரளாவை சேர்ந்த அலிகான் என்பவர் கடந்த 15-ம் தேதி எர்ணாகுளம் – டெல்லி இடையே இயக்கப்படும் மில்லேனியம் விரைவு ரயிலில் பயணித்தார். முன்பதிவு செய்திருந்த பெட்டியில் கீழ் படுக்கையில் அவர் உறங்கி கொண்டிருந்தார்.
அப்போது நடுவே உள்ள படுக்கையில் மற்றொரு பயணி உறங்கி கொண்டிருந்த நிலையில், மிடில் பெர்த் திடீரென அறுந்து அலிகான் மீது விழுந்தது. இதனால் பலத்த காயமடைந்த அவருக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடு படுக்கை உடைந்து விழவில்லை என்றும், மற்றொரு பயணி சரியாக சங்கிலியில் மாட்டாமல் சென்றதால் விபத்து நடந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அலிகானின் உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது,