பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும், சிறுநீரகவியல் துறை நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் அத்வானியின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து எல்.கே.அத்வானி வீடு திரும்பினார்.