ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியலில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ராமநாதசுவாமி கோவிலின் கிழக்கு கோபுர மண்டபத்தில் நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
இதில், சுமார் ஒரு கோடியே பதினைந்து லட்சம் ரூபாய் ரொக்கம், 71 கிராம் தங்கம் மற்றும் சுமார் 5 கிலோ வெள்ளி காணிக்கையாக கிடைத்துள்ளதென கோவில் நிர்வாகம் தெரிவித்துக்கப்பட்டுள்ளது.