குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை 2வது திருமணம் செய்த காவலரை காவல்துறையிடம் பெண்ணின் உறவினர்கள் ஒப்படைத்தனர்.
கிராத்தூர் பகுதியை சேர்ந்த ஆஸ்மி, அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த காவலரான ராஜேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து ஆஸ்மியின் வீட்டுக்கு அருகேயுள்ள பெண் காவலருக்கு, ராஜேஷ் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தனக்கு தெரிந்த சக காவலர்களிடம் ராஜேஷ் குறித்து விசாரித்துள்ளார்.
அப்போது ராஜேஷுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆத்திரமடைந்த ஆஸ்மியின் உறவினர்கள் ராஜேஷை கடுமையாக தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.