ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களின் பரிசுத்தொகையை அதிகரிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது.
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில், வருகிற ஜூலை 26ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் 102 வீரர் – வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு 1 கோடி ரூபாயும், வெள்ளிப்பதக்கம் பெறுபவர்களுக்கு 75 லட்சம் ரூபாயும், வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றுபவர்களுக்கு 50 லட்சம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது.