நாடாளுமன்றதில் செங்கோலை நிறுவி தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி என மத்திய இணை அமைச்சசர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.சவுத்ரிக்கு தமிழ் கலாச்சாரம் தெரியாது. அவருக்கு தமிழ் பாரம்பரியம் தெரியாது. அவருக்கு தமிழ் செங்கோலின் மதிப்பு தெரியாது. செங்கோலை அவமதிக்கும் செயலுக்கு திமுக மற்றும் இண்டியா கூட்டணியினர் துணை போகிறார்கள்.
நீதி தவறாமல் இருக்கவும் சோழர்கள் பயன்படுத்தியது தான் செங்கோல். சிறந்த ஆட்சியை கொடுத்தவர்கள் சோழர்கள். தெற்கு ஆசியா முழுவதும் ஆட்சி செய்த சோழர்கள் தமிழர்களின் பெருமையை கொண்டு சேர்த்தனர்
செங்கோல் அனைவருக்கும் நீதியை பிரதிபலிக்கிறது. செங்கோல் சமத்துவ அரசாங்கத்தையும் நியாயமான அரசாங்கத்தையும் பிரதிபலிக்கிறது. நாடாளுமன்றத்தில் செங்கோலை சாதாரணமாக வைக்கவில்லை. பிரதமர் மோடி தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். நாடாளுமன்றதில் செங்கோலை நிறுவி தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி என அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.