தமிழக பாஜக மாநில செயற்குழு கூட்டம் ஜூலை-6ம் தேதி கூடுகிறது.
இது தொடர்பாக, பாஜக மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக பாஜக மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 6ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், செயற்குழு கூட்டத்தில் கொண்டு வரவேண்டிய தீர்மானங்கள் குறித்து கருத்துக்களை tamilnadubjp@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என கேசவ விநாயகன் தெரிவித்துள்ளார்.