திமுக கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கான பரிசாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை அளித்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் H. ராஜா தெரிவித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய உயிரிழப்பை மறைப்பதற்காக வயிற்று வலி மற்றும் வலிப்பு நோயால் உயிரிழந்ததாக அம்மாவட்டத்தின் அப்போதைய ஆட்சி தலைவர் தெரிவித்ததாக கூறினார்.
இந்த தகவலை துறை அமைச்சரையோ முதலமைச்சரையோ
ஆலோசனை செய்யாமல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணியில் ஒருவருக்கு ஒருவர் புகழ்ந்து கொண்டு இருப்பதைவிட இதுபோன்ற உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை வேண்டும் என ஹெச்.ராஜா வலியுறுத்தினார்.