டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
டி20 உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடின.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
172 ரன்களை இலக்காக கொண்டு ஆடத்தொடங்கிய இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது. இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி நாளை தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
			















