மயிலாடுதுறையில் மணிக்கூண்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.
மயிலாடுதுறையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மணிக்கூண்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவலின் பேரில் மணிகூண்டு பகுதியில் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் மூலம் போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுதொடர்பாக போலீசார்’ தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.