கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தொடர் மழையின் காரணமாக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இதனையடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கோதையாறு, தாமிரபரணி மற்றும் பரளியாறின் கரையோரப் பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.