ஈரோட்டில் குட்கா விற்பனை செய்த கடைக்கு உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர்கள் சீல் வைத்தனர்.
ஈரோடு மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
அதன் பேரில் மாதவகிருஷ்ணா வீதியில் உள்ள சீதாராம் என்பவரது பீடா கடையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது 2 கிலோ அளவிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.