ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் ஜூலை 3-ஆம் தேதி முதல் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது.
அந்த வகையில் 179 ரூபாய் சேவைக்கான கட்டணம் 199 ரூபாயாகவும், 455 ரூபாய் சேவை கட்டணம் 599 ரூபாயாகவும், 1,799 ரூபாய் சேவை கட்டணம் 1,999 ரூபாயாகவும் அதிகரிக்கவுள்ளது.
போஸ்ட் பெய்டு பிளானை பொறுத்தமட்டில், 399 ரூபாய்க்கான சேவைக் கட்டணம் 449 ரூபாயாகவும், 499 ரூபாய் சேவைக்கான கட்டணம் 549 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 599 ரூபாய்க்கான சேவை நூறு ரூபாய் அதிகரித்து 699 ரூபாயாகவும், 999 ரூபாய்க்கான சேவைக் கட்டணம் 1,199 ரூபாயாக அதிகரித்து ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.