டெல்லியில் சமாஜ்வாடி எம்.பி. ராம் கோபால் யாதவை ஊழியர்கள் தூக்கிச் சென்று காரில அமரவைக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது.
குடியிருப்பு பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்ததால் பலர் இன்னல்களை எதிர்கொண்டனர். இந்நிலையில் லோதி எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள சமாஜ்வாடி எம்.பி. ராம் கோபால் யாதவின் வீட்டை மழைநீர் சூழ்ந்ததால், அவருடைய ஊழியர்கள் சிலர் இணைந்து அவரை தூக்கிக் சென்று காரில் அமரவைத்தனர்.