ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே சவுதி அரேபியாவில் வேலைபார்த்து வந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிள்ளையார்குளம் கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
5 வருடங்கள் பணியாற்றிய நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்ப விமான டிக்கெட் எடுத்துவிட்டு காத்திருந்துள்ளார்.
இதற்கிடையே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயில்சாமி உயிரிழந்து விட்டதாக அவருடைய நண்பர்கள் தகவலளித்துள்ளார்.
இதைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மயில்சாமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரை நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.