நீர்வரத்து சீரானதால் தேனி சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் சுருளி அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சுருளிஅருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
இந்நிலையில் மழை பொழிவு குறைந்து நீர் வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து ஏராளமானோர் அருவியில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.