நீலகிரி மாவட்டம், ஓவேலி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய யானை ஒன்று போராடி ஆற்றை கடக்கும் வீடியோ வெளியகியுள்ளது.
கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதியில் கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில் ஓவேலி அருகே சவுகத்தி வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக ஆற்றை கடக்க முயன்றன. அப்போது ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் யானை ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
நீண்ட நேரமாக போராடிய யானை ஆற்றை கடந்து வெளியேறியது. இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.