தமிழக மீன்வர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
இந்திய மீனவர்களின் பாதுகாப்பில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க இந்திய தூதரகம் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஜெய்சங்கர், மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க 10 ஆண்டுகளாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலம், மீனவர்களின் நலன் காப்பதில் மத்திய அரசு அதிகபட்ச முன்னுரிமை அளித்து வருவதாகவும் ஜெய்சங்களர் குறிப்பிட்டுள்ளார்.