டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து பலியானோரின் குடும்பத்தினருக்கு 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பெய்த கனமழை காரணமாக விமான நிலைய டெர்மினல் 1-இன் மேற்கூரை இடிந்து விழுந்தது. சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து அறிந்ததும் உடனடியாக மீட்புப் படையினர் துரித நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் ராம் மோகன் நாயுடு கூறினார்.