நீட் தேர்வு தொடர்பாக எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் திங்கட்கிழமை வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
நீட் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து அவையில் விவாதிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் மாணவர்களின் பிரச்சினைக்கு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருமித்து முக்கியத்துவம் அளிக்கின்றன என்ற செய்தி அவர்களைச் சென்றடைய வேண்டுமெனவும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார்.
அப்போது குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலில் விவாதம் நடத்துமாறு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார்.
ஆனால், நீட் பிரச்சினையை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், அவை திங்கள் கிழமை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.