முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இன்று கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,
தனது தலைமைத்துவம் மற்றும் அறிவார்ந்த செயல்பாடுகளால் நரசிம்ம ராவ் எப்போதும் நினைவுகூரப்படுவார் என தெரிவித்துள்ளார்.
நிகழாண்டின் தொடக்கத்தில் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா நரசிம்ம ராவுக்கு அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, இதன்மூலம் தேசத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய வளமான பங்களிப்பை அங்கீகரித்ததாகவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.