சாத்தியமேயில்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி?
Aug 27, 2025, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாத்தியமேயில்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி?

Web Desk by Web Desk
Jun 28, 2024, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சர் ஸ்டாலின், நிறைவேற்றச் சாத்தியமேயில்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக? எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவை விதி 110 ன் கீழ் அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று, திமுக மாநிலங்களவை உறுப்பினர்  வில்சன் அவர்கள், ஓசூர் விமான நிலையம் குறித்துக் கேட்ட கேள்விக்கு, அன்றைய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெனரல் V.K. சிங் அவர்கள், தெளிவாகப் பதிலளித்துள்ளார்.

இந்திய அரசு மற்றும் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கிடையேயான ஒப்பந்தத்தின்படி, பெங்களூர் சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு, 150 கி.மீ. சுற்றளவில், புதிய விமான நிலையங்கள் அமைக்க முடியாது என்பதையும், ஓசூரில் அமைந்துள்ள விமான நிலையம், TAAL என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான விமான நிலையம் என்பதால், மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடியாது என்பதையும், ஓசூர் விமான நிலையத்தைப் பயணிகள் பயன்படுத்தும் வண்ணம் மேம்படுத்த ஆகும் செலவு 30 கோடி ரூபாய் என்றும் விளக்கமாகக் கூறியதோடு, மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் ஆய்வு முடிவுகளையும் எடுத்துக் கூறியிருந்தார்.

அத்துடன், தமிழக அரசு TAAL நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்திப் பயன்படுத்தலாம் என்றும் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்.

இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. 30 கோடி ரூபாய் செலவில் ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காமல், வெறும் விளம்பரத்துக்காக, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்போம் என்று தற்போது மீண்டும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்.

ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு, 110 ஆம் விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 7,200 புதிய பள்ளி வகுப்பறைகள், 16,390 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்பாடு, 1,000 புதிய பேருந்துகள், 500 மின்சாரப் பேருந்துகள் உள்ளிட்டவை, இரண்டு ஆண்டுகளாக அரைகுறை நடவடிக்கைகளோடு நிற்கின்றன.

இரண்டு ஆண்டுகளில், பேருந்துகளைக் கூட வாங்காத திமுக, தற்போது விமான நிலையம் அமைக்கவிருப்பதாகக் கூறியிருப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், மூன்று ஆண்டுகளாக விளம்பர அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நிறைவேற்றச் சாத்தியமேயில்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags: Who makes impossible announcements to deceive? Annamalai question for Stalin?
ShareTweetSendShare
Previous Post

நரசிம்ம ராவ் பிறந்த நாள்- பிரதமர் மோடி மரியாதை!

Next Post

மாஞ்சோலை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!

Related News

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் காலியாக இருந்த இருக்கைகள்!

திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் :150 கிலோ கொழுக்கட்டை படையல்!

பணம் கேட்டு மிரட்டிய விசிக பிரமுகர் மீது குண்டாஸ்!

சென்னை : சர்வர் பிரச்சனையால் ரேஷன் கடையில் நீண்ட கூட்டம்!

நாமக்கல்லில் 11 அவதாரங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை!

தென்காசி : இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள 12 அடி விநாயகர் சிலை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : அல்காரஸ் 2-வது சுற்றுக்கு தகுதி!

ராமநாதபுரம் : 110 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிப்பு!

ஈரோடு : கேஸ் குழாய் பணிகளில் தொய்வு – மக்கள் போராட்டம்!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி!

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளது : ராஜ்நாத் சிங்

மதுபோதையில் வகுப்பறையில் உறங்கிய ஆசிரியர் – கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை கடுமையாக விமர்சித்த மதசார்பற்ற ஜனதா தளம்!

புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி சதம்!

சுவாமி விநாயகரை போன்று அணிவகுத்து நின்ற மாணவர்கள்!

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை பார்த்து விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies