மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கன மழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக மாஞ்சோலை, காக்காச்சி உள்ளிட்ட பகுதிகளில் 112 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் தேயிலை தோட்டம் உள்ளிட்டவை பார்வையிட வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விதிக்கப்பட்ட இந்த தடையானது மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.