நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அந்த மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி வகித்தபோது ராஞ்சியில் 8.36 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை இழந்தார்.
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கின்கீழ் அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு ராஞ்சி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ரங்கன் முகோபாத்யாய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.