கர்நாடக காங்கிரசில் நிலவும் உட்கட்சி பூசலால் மாநிலத்தின் நிதி நிலைமை அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக காங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கும், முதல்வர் பதவிக்கும் அந்தக் கட்சியினர் இடையே மிகப்பெரிய சண்டை நடைபெற்று வருவதாக கூறினார்.
மேலும் காங்கிஸார் இடையே ஒற்றுமை இல்லை என்று கூறிய மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, இதனால் மாநில அரசின் நிர்வாகம் சீரழிந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.