கனமழை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை மழைநீர் சூழ்ந்ததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
டெல்லியில் பெய்த கனமழை காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை மழைநீர் சூழ்ந்ததால், தனித்தீவு போல காட்சியளிக்கிறது.
இந்த மருத்துவமனையில் ஹரியானா, உத்தர பிரதேசம் என அண்டை மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மழைநீர் சூழ்ந்ததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.