காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையத்திற்கான பொருளாதார அறிக்கை இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளது என அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அப்போது வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த டிட்கோ நிறுவனத்தை ஒரு முகமை நிறுவனமாக அரசு நியமித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயாரிக்க ஆலோசகர் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.