மாநிலங்களவையில் மயங்கி விழுந்த காங்கிரஸ் எம்.பி. பூலோ தேவி நேதம், ஸ்டெர்ச்சரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மாநிலங்களவையில் நீட் விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதியில் திரண்டு முழக்கமிட்டனர்.
அப்போது பூலோ தேவி நேதம் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவைக் காவலர்கள் அவரை மீட்டு ஸ்டெர்ச்சரில் ஏற்றி, ஆர்எம்எல் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.