ஈரான் பொதுத் தேர்தலையொட்டி, டெல்லியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி அண்மையில் அந்த நாட்டில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில் டெல்லியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் ஈரான் தூதரக அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்தனர். இரண்டு நாட்களில் தேர்தல் முடிவு வெளியாகவுள்ளது.