மகாராஷ்டிராவில் பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் ஜூலை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அந்த மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டப் பேரவையில் பேசிய அவர், ‘முதல்வரின் அன்புக்குரிய சகோதரிகள்’ திட்டத்தின்கீழ், பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும் என்று கூறிய துணை முதல்வர் அஜித் பவார், பருத்தி மற்றும் சோயாபீன்ஸ் விளைவிக்கும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு போனசாக தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
ஜூலை முதல் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 5 ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்றும், விலங்குகள் தாக்கி உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அஜித் பவார் கூறியுள்ளார்.