திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே காட்டூர் ஏரியை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறம் திரைப்பட இயக்குநர் கோபி நைனார் வலியுறுத்தியுள்ளார்.
திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காட்டூர் – தத்தமஞ்சி நீர்த்தேக்கங்களில் இருந்து தேக்கிய தண்ணீரை வெளியேற்றி, சமூக விரோதிகள் சவுடு மண் எடுப்பதால், நிலத்தடி நீர் உவர் நீராக மாறியுள்ளதாக குற்றச்சாட்டினார்.
எனவே, நீர்த்தேக்கங்களில் தேக்கியுள்ள தண்ணீரை வெளியேற்றக்கூடாது, மண் குவாரி செயல்பட அரசு தடை விதிக்க வேண்டும் என கோபி நைனார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.