டெல்லியில் பெய்த கனமழையால் மண்பாண்ட வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
சாலையோரம் மண்பாண்ட கடை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள், காலையில் வந்து பார்த்தபோது பொருட்கள் எல்லாம் மழைநீரில் மூழ்கி சேதமடைந்திருந்தன.
டெல்லியில் இதுபோன்ற மழை ஒருபோதும் பெய்ததில்லை என்றும், இந்த இழப்பிலிருந்து எப்படி மீண்டு வருவது என தெரியவில்லை என்றும் மண்பாண்ட வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.