நெல்லையில் கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி மாரடைப்பால் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு தமிழக அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி வண்ணை கணேசன் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்ட சக நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.