தென்காசியில் உறவினர் பெண்ணை கேலி செய்ததை தட்டிக் கேட்ட நபரை சரமாரியாக தாக்கிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
குத்துக்கல்வலசை பகுதியை சேர்ந்த மாதவனின் உறவினர் பெண்ணான கவிதாவை அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் கேலி செய்துள்ளனர்.
இதுகுறித்து கவிதா, மாதவனிடம் கூறியதையடுத்து இளைஞர்களை மாதவன் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மாதவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் கோபாலகிருஷ்ணன், அஜ்மல் அலி, குமார், ரமேஷ் ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.