ஜூலை 26-ம் தேதி தொடங்கும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து ஓட்டப்பந்தய வீராங்கனை தாம்சன் ஹெரா விலகுவதாக அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகரான பாரீசில் ஜூலை 26 -ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.
கடந்த இரு ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்த ஓட்டப்பந்தய வீராங்கனை தாம்சன் ஹெரா இதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பின்னங்காலில் ஏற்பட்ட தசை கிழிவு காரணமாக இவர் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.