புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்த திட்டத்தின் கீழ், புதுச்சேரி நகரப்பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சாலை ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் முதற்கட்ட பணியாக சுப்பையா சாலை முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.