புதுக்கோட்டையில் கள் இறக்க அனுமதிக்க அரசிடம் பரிந்துரைக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழகத்தில் இனி கள்ளச்சாராய மரணங்கள் நிகழாமல் இருக்க கள் இறக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு அரசிடம் பரிந்துரைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.