தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா பகுதியில் தனியார் பள்ளி பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் காயமடைந்தனர்.
அனுமகொண்டா பகுதியில் சாலையை கடக்க முயன்ற தனியார் பள்ளி பேருந்து மீது வேகமாக வந்த கார் மோதியது. இதில் பேருந்து சாலையில் கவிழ்ந்த நிலையில் மாணவ- மாணவிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.