உதகையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காவலர் சவுந்தர்ராஜ் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கஞ்சா விற்பனைக்கு மேலும் சில நபர்கள் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில் சவுந்தர்ராஜனுடன் இணைந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கோகுல், சுந்தரம், செல்வமுருகன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.