மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே குடிநீர் விநியோகிக்காததைக் கண்டித்து காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு ஊராட்சிக்கு உட்பட்ட தேத்தாகுடியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நான்கு ஆண்டுகளாகியும் அறிவித்தபடி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், சீர்காழி – நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சில கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன.