சென்னை பெரவள்ளூரில் வாகனங்களை சாலையோரம் நிறுத்துவது தொடர்பான தகராறில் ஆங்கிலோ இந்தியர் தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.
ராயபுரம் சி.ஜி.காலனியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செல்வம் என்பவர், எஸ்.ஆர்.பி. கோவில் தெருவில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளி வாசலில் சவாரிக்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு தனது மகனை அழைத்துச் செல்வதற்காக வந்த ஆங்கிலோ இந்தியரான ரெக்கார்டோ என்பவர், ஆட்டோவை ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார்.
இது தொடர்பான தகராறில் ரெக்கார்டோ சரமாரியாக தாக்கியதில், செல்வம் சுருண்டு விழுந்து பலியானார். இதனையடுத்து ரெக்கார்டோவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.