மும்பையில் 60 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநர் அமித் காவ்தே தெரிவித்துள்ளார்.
மும்பை நாக்பாடா, டோங்கிரி ஆகிய பகுதிகளில் நடத்திய ஆய்வில் இந்தப் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும், இதில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.