வெளியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் மிஸ்ரி ஜூலை 15ம் தேதி பதவியேற்கவுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஆக உள்ள வினய் குவாத்ராவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய வெளியுறவுச் செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து வரும் ஜூலை 15ம் தேதி அவர் பதவியேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது