நீலகிரியில் பெய்துவரும் கனமழை காரணமாக 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் அப்பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகிறது.
இந்நிலையில் கூடலூர், பந்தலூர் ஆகிய இரு பகுதிகளில் பலத்த மழை காரணமாக இப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.