நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து தனது மகள் திருமணத்துக்கு அழைப்பு விடுத்தார்.
மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று மோடி 3வது முறையாக பிரதமரானார். இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார், தனது குடும்பத்தினருடன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
அப்போது அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த சரத்குமார், மகள் வரலட்சுமியின் திருமணத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.