திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா அமெரிக்காவில் மூட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில், இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூயார்க்கிலுள்ள மருத்துவமனையில் தலாய் லாமாவுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் தலாய் லாமாவின் உடல் சீராக உள்ளதென
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.