உத்தர பிரதேச மாநிலத்தில் ஓவியர் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா ஓவியத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார்.
டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் களம் காண்கின்றன.
இந்த நிலையில், ரோஹித் சர்மாவை கவுரவிக்கும் விதமாக உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியைச் சேர்ந்த ஜுகைப் கான் என்ற ஓவியர் எட்டு அடி உயரத்தில் ரோஹித் சர்மா ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார்.