ஜார்ஜியாவில் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கு எதிரான மசோதாக்கள் நிறைவேற்ற்ப்பட்டதற்கு ஓரின சேர்க்கை ஈர்ப்பாளர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
ஜார்ஜிய நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது தன் பாலின ஈர்ப்பாளர்கள் பிற குழந்தைகளை தத்தெடுக்கக்கூடாது, மற்றும் தங்களது அடையாள அட்டைகளில் பாலினத்தை மாற்றக்கூடாது உள்ளிட்ட சட்ட மசோதாக்கள் அங்கீகரிக்கப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தன்பாலின அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதில் நியாயமற்ற இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன.